பொதுச் செயலாளர் பதவி நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னரே உறுதியாகும்-சசிகலா

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னரே யார் பொது செயலாளர்கள் என்பது தெரிய வரும் வி.கே. சசிகலா தெரிவித்தார்.

Update: 2023-10-30 01:35 GMT

சசிகலா செய்தியாளர் சந்திப்பு  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேவர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி விழாவிற்காக மதுரை விமான நிலையம் வந்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வருவது குறித்த கேள்விக்கு? விருப்பபட்டவர்கள் வருவதில் எந்த தவறும் இல்லை. பாஜக கூட்டணியில் உள்ளீர்களா என்ற கேள்விக்கு? 2024 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தான் யார் எந்த கட்சியில் நிற்க போகிறார்கள் என்று தெரிய வரும்.ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பான கேள்விக்கு?ஆளுநர் மாளிகை முகப்பு வாயிலில் காவல்துறை இருந்தும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. முன்பே அவரை பிடித்திருக்கலாம். எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் ஆவதற்கு முழு தகுதி உள்ளதாக அதிமுக வினர் கூறுகின்றனர், இது குறித்த கேள்விக்கு?மக்கள் முடிவு செய்வார்கள், தனி மனிதராக எதையும் சொல்ல முடியாது 2024 நாடாளுமன்ற தேர்தலில் வியூகம் உள்ளது. ஓ.பி.எஸ்.எங்கள் குடும்பத்தில் ஒருவர். குடும்பம் மாதிரி அவர் விருந்தாளி கிடையாது. மீனவர்கள் எப்படி சென்றால் என்ன என்று எண்ணி தான் திமுக கட்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தார்கள். மீனவர்களுக்கு திமுக உதவி செய்வார்கள் என்று நினைப்பது தவறு.தேர்தலுக்கு முன் அனைவரையும் ஒன்றிணைத்து தேர்தலில் போட்டியிடுவோம் என்று சசிகலா தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் தேர்தலை சந்திப்பீர்களா அல்லது புதிதாக பொதுச் செயலாளர் தேர்வு செய்து போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு?எடப்பாடி பழனிச்சாமியை  தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை தற்போது நீதிமன்றத்தில் தீர்ப்பு  வர உள்ளதால் தீர்ப்பு வந்த பின்னர் தான் யார் பொதுச்செயலாளர் என்பது தெரியும், அனைவரும் தேர்தல் ஆணைய உத்தரவை தவறாக புரிந்து கொண்டு உள்ளார்கள் என தெரிவித்தார். தொடர்ந்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள் அதிமுக செயலாளராக சசிக்கலா அவர்களும் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் அவர்களும் இருப்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா என கேட்டதற்கு? ஏற்கனவே உள்ளபடி தான் கட்சி செயல்படும் எனவும் தொண்டர்களை ஏற்கனவே சந்தித்து வருகிறேன் விரைவில் தமிழக முழுவதும் தொண்டர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News