எம்ஜிஆரின் செல்ல பிள்ளையான என்னை வெற்றிபெற செய்ய வேண்டும்:ஏசி சண்முகம்

கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வஞ்சூர், லத்தேரி,பனமடங்கி,பரதராமி உள்ளிட்ட பகுதிகளில் ஏசி சண்முகம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-04-12 11:37 GMT

வாக்கு சேகரித்த ஏ.சி சண்முகம்

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நிதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வஞ்சூர், லத்தேரி,பனமடங்கி,பரதராமி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தில் வேட்பாளர் ஏசி சண்முகம் யாருக்கு ஓட்டு போடுகிறீர்கள் என்று பொதுமக்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.. அப்போது மக்கள் தாமரை என்று பதிலளித்தனர். தொடர்ந்து ஏசி சண்முகம் கடந்த முறை வேறொரு சின்னத்தில் நின்றேன் ஞாபகம் உள்ளதா என்று கேட்க மக்கள் இரட்டை இலை என தெரிவித்தனர்.

அதற்கு அதையெல்லாம் இப்போது மறந்துவிட வேண்டும். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டபோது கே வி குப்பம் தொகுதியில் தான் அதிக வாக்குகளை ( 10,000) பெற்றேன். எம்ஜிஆர் மற்றும் ஜானகி அம்மாவின் செல்ல பிள்ளையான என்னை இந்த தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

நான் தனிப்பட்ட முறையில் எவ்வளவு பணிகளை செய்கிறேன். வெற்றி பெற்றால் மோடி அமைச்சரவையில் என்னென்ன திட்டங்கள் உள்ளதோ அவை அனைத்தையும் இங்கு கொண்டு வருவேன்,"என்று பேசினார்.

Tags:    

Similar News