லியோ பார்க்க குவிந்த ரசிகர்கள் - திரையரங்கு ஊழியர்களுடன் வாக்குவாதம்
சேலத்தில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் திரையரங்கில் விஜயின் ரசிகர்கள் குவிந்து மேளதாளங்கள் முழங்க கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லியோ திரைப்படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது. இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகினர். சேலம் மாநகர் ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கு முன்பு குவிந்த விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் விஜய் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் மேலும் மேளதாளம் முழங்க ஆடிப்பாடி லியோ படத்தை கொண்டாடினர். பின்னர் ரசிகர்கள் நுழைவதற்குகாக அங்கு அமைக்கப்பட்டிருந்த கேட்டை உடைத்து விட்டு உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து ஏராளமானோர் ஒரே நேரத்தில் திரையரங்குக்குள் சென்றனர். பெண்கள் மற்றும் ரசிகர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கையில் டிக்கெட் வைத்துக் கொண்டு திரையரங்குக்குள் அமர இடம் இல்லாமல் படம் பார்க்க முடியாமல் தவித்தனர். அப்போது ரசிகர்கள் திரையரங்கு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர் பின்னர் வந்திருந்த போலீசார் கையில் டிக்கெட்டுடன் காத்திருந்த விஜய் ரசிகர்களை திரையரங்குக்குள் இருந்து வெளியே இழுத்து தள்ளினர். இதனால் மேலும் பரபரப்பு நிலவியது.1000 ரூபாய் வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியும் எங்களால் படம் பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் வேதனையுடன் திரும்பி சென்றனர்.
பலத்த எதிர்பார்ப்புக்கு நடுவே லியோ திரைப்படம் இன்று காலை வெளியானது. ரசிகர்கள் காலை முதலே திரையரங்கம் முன்பு குவித்தனர்.