டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்தினார் . ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் மா சுப்பிரமணியன் கூறியதாவது:-
இந்த கூட்டத்தில் டெங்கு, மலேரியா பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. எனவே செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. டெங்கு பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். கொசு ஒழிப்புக்கான மருந்துகள் அனைத்தும் போதிய அளவில் இருப்பு உள்ளது. டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் பரவல் இருப்பதால் எல்லைகள் கண்காணிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூரில் உயிரிழந்த பயிற்சி பெண் மருத்துவருக்கு டெங்கு, மலேரியா காய்ச்சல் பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
https://www.dailythanthi.com/News/State/people-should-not-be-afraid-of-dengue-minister-m-subramanian-1053788