கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்

கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்த நிலையில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

Update: 2024-06-19 14:23 GMT

கள்ளக்குறிச்சி ஆட்சியர்

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ்  (49 காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது.   ,

உடனடியாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர்  கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News