வசூல் வேட்டையில் ஜெயிலர் !!
Update: 2023-08-09 07:09 GMT
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதியான நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில வெளிநாடுகளில் இன்று நள்ளிரவே ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் ஜெயிலர் படத்துக்கு ஒட்டுமொத்தமாக முதல் நாளில் 4,124 காட்சிகள் திரையிடப்படும் நிலையில், இதுவரை ஒட்டுமொத்தமாக 14 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், புக் மை ஷோவில் இந்தியளவில் இதுவரை இல்லாத அளவுக்கு டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டு வருவதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன.