சித்தர்மலை ஸ்ரீ ஜோதி கந்த சந்தன மகாலிங்கேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்
Update: 2023-09-30 06:00 GMT
நாமக்கல்- மோகனுார் சாலை, சித்தர்மலை மேல் அமைந்துள்ள சவுந்திரவள்ளியம்மை உடனமர் ஸ்ரீ ஜோதி கந்த சந்தன மகாலிங்கேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த மலைக்கு செல்வதற்கு தற்போது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சிவராத்திரி, பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம், வழக்கத்தை விட பலமடங்கு பக்தர்கள் வருகின்றனர். புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.