புதிய இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை - கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி துவக்கி வைத்தார்

Update: 2023-10-09 11:46 GMT

 கே.ஆர்.என்.இராஜேஸ்குமார்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் கிழக்கு மாவட்டம் மோகனூர் ஒன்றியம் வளையப்பட்டி ஊராட்சியில் உள்ள இல்லந்தோறும் இளைஞர் அணி புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி துவக்கி வைத்தார்.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப் படியும், கழக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படியும், இல்லந்தோறும் இளைஞர் அணி புதிய உறுப்பினர் சேர்க்கை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர். அதன் முதல் கட்டமாக நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் மோகனூர் ஒன்றியம் வளையப்பட்டி ஊராட்சியில் இளைஞர் அணி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெ.நவலடி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.விஸ்வநாத் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பா.கிருபாகரன், தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் சர்தார்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோகனூர் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வேலு பாலாஜி வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இல்லந்தோறும் இளைஞர் அணி புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் இராஜேஸ்குமார் எம்.பி பேசுகையில், இல்லந்தோறும் அதிக அளவில் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும், வரும் டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாட்டுப் பணிகள் குறித்தும் இன்று 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள நளா ஹோட்டலில் நடைபெறும் நேர்காணல் நிகழ்ச்சியில் இளைஞர் அணிக்கு விண்ணப்பித்த அனைவரும் பங்கேற்க வேண்டும், புதிதாக இளைஞர் அணியில் உறுப்பினராக சேரும் இளைஞர்கள் வீடு வீடாக சென்று முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் நடந்த சாதனைகள் குறித்தும், தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலாற்றி வரும் சாதனைகள் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும் என்றும் இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பூவராகவன், இனியன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வி.இராமச்சந்திரன், ஆர்.ராஜா, எஸ்.பிரபு, கோபிநாத், நா.சக்திவேல், ஒன்றிய துணை செயலாளர் ராஜசேகர், மாவட்ட பிரதிநிதிகள் முத்துசாமி, சரவணன், கிளைச் செயலாளர் ரமேஷ், கார்த்திக், கலைச்செல்வன், ராமமூர்த்தி, ரகுபதி, அர்ஜுனன், சசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News