திருச்செங்கோடு சந்தைப்பேட்டை அங்காடி கட்டுமானப் பணிகள்

Update: 2023-10-12 06:40 GMT

 கட்டுமானப் பணிகள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் கட்டப் படும் காய்கறி அங்காடிகள், வணிகவளாகம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வரும் 2ம் தளத்தில் தார்சு போடும் பணி நடந்துவருகிறது. பணிகளை நகராட்சி ஆணையாளர் சேகர், உதவிப் பொறியாளர் செந்தில்குமரன் வொர்க்கிங் இன்ஸ்பெக்டர் குமரன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி சந்தைப்பேட்டையில் ரூ. 4 கோடியே 31 லட்சம் மதிப்பில் 317 காய்கறி அங்காடி கடைகள் மற்றும் மூன்று கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 26 முதல் தளக்கடைகள் 23 இரண்டாம் தளக்கடைகள் 26 குடோன்கள் என அமைக்கப்பட உள்ள வணிக வளாகம் கட்டிடம் கட்டுமான பணி கடந்த ஜனவரி 9ம் தேதி பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது.

Advertisement

கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் ரூ 3 கோடியே 6 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டு வரும் வணிக வளாக கட்டிடத்தின் 2ம் தளத்தில் தார்சு போடும் பணிகள் நடந்தது. இதனை திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் சேகர் நகராட்சி உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியம் வொர்கிங் இன்ஸ்பெக்டர் குமரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

ஆய்வின் போது நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தார்.

Tags:    

Similar News