குமரியில் சீசன் கடைகள் ஏலம் விடுவதில் சிக்கல்

Seasonal shops in Kumari have problems with auctioning

Update: 2023-10-31 08:49 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நவம்பர் 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனை யொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு வசதியாக ஆண்டு தோறும் கன்னியாகுமரியில் நடை பாதைகளில் 200-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம்.

அதன்படி கடந்த 26-ந்தேதி நடந்த கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை முன்பு உள்ள இடத்தில் சபரி மலை அய்யப்ப பக்தர்கள் வருகையையொட்டி தற்காலிக சீசன் கடைகள் ஏலம் விடுவதற்கான தீர்மா னம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு பெரும்பாலான கவுன்சிலர்கள் ஆதரவு அளிக்க வில்லை. இதனால் இந்த கூட்டத்தில் சபரிமலை சீசன் கடைகள் ஏலம் விடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்ப டவில்லை. இதனால் தற்போது கன்னியாகுமரியில் தற்காலிக சீசன் கடைகளை ஏலம் விடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

சபரிமலை அய்யப்ப சீசன் தொடங்கு வதற்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில் இதுவரை கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சீசன் கடைகளை ஏலம் விடுவதற்கான எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும் இந்த சீசன் கடைகளை ஏலம் எடுப்பதற்காக இப்போதே வெளியூர் வியாபாரிகள் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர்.

Tags:    

Similar News