தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மோசடி நபர்கள் நடமாட்டம் ?

Update: 2023-11-02 12:36 GMT
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர்கள் என போலியான அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, நோயாளிகளை மூளைச்சலவை செய்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்நிலையில், சிலர் போலியான அடையாள அட்டைகளை வைத்துக்கொண்டு, மருத்துவக்கல்லூரிக்கு வரும் நோயாளிகளிடம் விரைவில் ஸ்கேன், அறுவை சிகிச்சை செய்யப்படும் எனவும், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நோக்கில், மூளைசலவை செய்யும் கும்பல் அதிகரித்துள்ளது.

Advertisement

இது குறித்து, தகவலறிந்த மருத்துவக்கல்லுாரி முதல்வர் பாலாஜிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் போன்று, நோயாளிகளிடம் ஸ்கேன், இரத்த பரிசோதனைகள், அறுவை சிகிச்சை சீக்கிரமாக செய்யப்படும் என கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி வேலை நடக்கிறது.   மேலும், நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லும் முயற்சிகள் நடப்பதாக தெரிய வருகிறது. எனவே, மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் தங்களது பணி நேரத்தில் அடையாள அட்டை மற்றும் சீருடையுடன் பணிபுரிய வேண்டும். 

மேலும், இதை தடுப்பதற்காக, 9626369366 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இது குறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வட்டாரத்தில் கூறியதாவது; மருத்துவமனையில் வேலை பார்க்கும் பணியாளர்கள் சிலர், நோயாளியிடமும், அவர்களது உறவினிடமும், இங்கு இருந்தால் சரியாக பார்க்க மாட்டார்கள். இங்கு வரும் மருத்துவர்கள் சிலர் தனியாக மருத்துவமனை நடத்தி வருகின்றனர். அங்கே சென்றால் நன்றாக கவனிப்பார்கள் என மூளைச் சலவை செய்து, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கமிஷனை வாங்கி கொள்வது நடக்கிறது.

கடந்த காலங்களில் இருந்த மருத்துவக்கல்லூரி முதல்வர்களிடம், பலர் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது, ஒரு நோயாளியை குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினால், 20 முதல் 30 ஆயிரம் மருத்துவர்கள் கமிஷன் கொடுத்தது எல்லாம் நடந்துள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியாட்கள் போலியான அடையாள அட்டையை வைத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் உலா வருவதாக மருத்துவக் கல்லூரி முதல்வரே கூறி இருப்பது வேதனையாக உள்ளது" இவ்வாறு தெரிவித்தனர்.

Tags:    

Similar News