சாலை விபத்து: இளைஞர் உயிரிழப்பு

Update: 2023-11-20 15:53 GMT
விபத்தில் இளைஞர் பலி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார். தஞ்சாவூர் அருகே கத்திரிநத்தம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சேகர் மகன் மகேந்திரன் (35). இவர் நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள ஆவின் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடிந்த பிறகு ஆவின் நிறுவனத்திலிருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டை புறவழிச்சாலை பாலத்தில் சென்ற இவர் மீது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதனால், பலத்த காயமடைந்த மகேந்திரன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News