திமுக ஆட்சியில் நீர்பாசன உள்கட்டமைப்பு வளர்ச்சி இல்லை

திமுக ஆட்சியில் நீர் பாசன உள்கட்டமைப்பு வளர்ச்சி இல்லை என மாஜி அமைச்சர் குற்றச்சாட்டியுள்ளார்.

Update: 2023-11-23 10:03 GMT

முன்னாள் அமைச்சர் உதயகுமார்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தென்மேற்கு பருவமழை குறையும் பொழுது விவசாய உற்பத்தி பாதிப்பு, கிராம பொருளாதார வளர்ச்சி பாதிப்பு ஆகியவை ஏற்படும்.  இது போன்ற காலங்களில் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் நீர் பாசன கட்டமைப்புகளை இந்தியாவே பாராட்டு வகையில் வளர்ச்சியைப் பெற்று, இந்தியாவிலேயே தமிழகத்தில் நீர் பாசன உள்கட்டமைகளில் முதன்மையாக இருந்தது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.  

ஆனால் தற்போது பருவ மழை குறைவின் காரணமாக விவசாயிகள் மிகுந்த வேதனை உள்ளனர். மேலும் நீர் பாசன உள்கட்டமைப்பு திமுக அரசு முறையாக பராமரிக்கவில்லை. இந்தியாவிலேயே முதன்மையாக இருந்த நீர் பாசன உள்கட்டமைப்பு தற்போது திமுக அரசு கவனம் செலுத்தவில்லை என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனால் பாசன பரப்பு ,பயிர் உற்பத்தி ஆகியவை பாதிப்பு ஏற்படும்.  பாசன உட்கட்டமைப்புகளை சீர்படுத்த திமுக அரசு எதையும் செய்யவில்லை.அது போல் நமக்கு பெற வேண்டிய ஜீவாதார உரிமைகளையும் பெற்று தராத கையாளாகாத அரசாக உள்ளது. விவசாயிகள் மீது அக்கறையில்லாத அரசாக, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல திமுகவின் செயல் உள்ளது. டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 90 வது கூட்டம் நடைபெறுகிறது.

இதில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். அதில் தமிழக அரசின் சார்பில் வினாடிக்கு 13,000 கன அடியை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என தமிழகத்தின் சார்பில் கூறப்பட உள்ளது. ஆனால் இதற்கு உரிய அழுத்தத்தை முதலமைச்சர் கொடுக்கவில்லை ஆனால் கர்நாடகா அரசின் முதல்வரும், துணை முதல்வரும் தொடர்ந்து நமக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நம்மை பாதுகாக்க வேண்டிய, நமது உரிமையை பெற்று தர வேண்டிய பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இதற்கு தீர்வு காணாமல், விவசாயின் மீது இரும்பு கரம் கொண்டு அடக்க நினைக்கும் சிந்தனை இருக்கிறார்கள் தவிர, விவசாயிகளின் வாழ வைப்பதற்காக எந்த முயற்சி எடுக்கவில்லை.

கர்நாடக அரசை கண்டித்து கண்டனமும் இதுவரை தெரிவிக்கவில்லை. கர்நாடகாவில் இருந்து தண்ணீரை திறக்க தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். ஏற்கனவே குறுவை சாகுபடியில் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகிறார்கள். இன்றைக்கு விவசாயிகளை காப்பாற்றுவது யார்? நாதியற்ற தமிழகத்தை காப்பாற்றுவது யார்? என்று குரல் ஒலித்து வருகிறது.

நிச்சயம் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வருவார் விவசாயிகளுக்கு கண்ணீரை துடைத்து விவசாய உரிமையை  நிலை நாட்டுவார் என கூறினார்.

Tags:    

Similar News