அரசு தலைமை மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
அரசு தலைமை மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் "தீ" தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அலுவலர் அம்பிகா அறிவுறுத்தலின்படி மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் பயிற்சி மருத்துவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு "தீ" தடுப்பு செயல் விளக்கம் மற்றும் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் முறைகள் பேரிடர் காலங்களில் தப்பித்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.
பெரம்பலூர் உதவி மாவட்ட அலுவலர், வீரபாகு தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்களை கொண்டு ஒத்திகை பயிற்சி நடத்திக் காண்பிக்கப்பட்டது.