லாரி மீது பேருந்து மோதிய விபத்து: பெண் பலி
மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
By : King 24X7 News (B)
Update: 2023-11-23 18:09 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து சிவகங்கைக்கு வந்த தனியார் பேருந்து கடந்த 2ஆம் தேதி சோழபுரம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் மத்திய கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் ஜெயப்பிரியா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் இதில் பலர் படுகாயமடைந்தனர். அதில் சிவகங்கையை சேர்ந்த விஜயராணி என்பவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் பலியின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. இது குறித்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்