காரைக்குடியில் மகளிர் கபடி போட்டி துவக்கம்
கபடி போட்டியில்பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 55 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்;
By : King 24X7 News (B)
Update: 2023-11-23 18:27 GMT
கபடி போட்டி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காரைக்குடி உடற்கல்வியியல் கல்லூரியில் இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு, அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்ககம் சார்பில் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டி தொடங்கியது. இப்போட்டியை துணை வேந்தர் ரவி தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் சுவாமிநாதன் பேசினார்.
உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முரளி ராஜன், உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தமிழக அணிகள் 16, ஆந்திர அணிகள் 12, கர்நாடகா அணிகள் 13, கேரளா அணிகள் 6, தெலுங்கானா அணிகள் 7, புதுச்சேரி ஒன்று என 55 அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டிகள் நவம்பர் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது