வீடுகளை காலி செய்ய வலியுறுத்தும் அதிகாரிகள் - ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த கிராம மக்கள்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் தரியம்பட்டி கிராமத்தில் குடியிருந்து வரும் 40 குடும்பங்களைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக, மின்சாரம் குடிநீர் இணைப்புகளைப் பெற்று அரசு இடத்தில் 40ற்கும் மேற்பட்ட தரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் வீடு கட்டி வசித்து வருவதாகவும், தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் இடத்தையும், வீட்டையும் காலி செய்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தி வருவதால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். எனவே தங்களுக்கு மாற்று இடம் கொடுத்தாலும் வீட்டைவிட்டு வெளியேறி வீடு கட்ட வசதியின்றி வறுமையில் இருப்பதாக தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்