தென்தாமரைகுளத்தில் புதிய சாலை பணி: அமைச்சர் பங்கேற்பு..!

தென்தாமரைகுளத்தில் புதிய சாலை பணிகள்களை அமைச்சர் துவக்கி வைத்தார். 

Update: 2023-11-24 11:33 GMT
சாலை பணிகளை துவக்கிய அமைச்சர்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி 71 லட்சம் மதிப்பில் நடைபெற்ற சாலை பணிகளை இன்று முகிலன்குடியிருப்பில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

       நிகழ்ச்சிக்கு தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப் தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபு , தி மு க மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .       இதில் பேரூராட்சி துணைத்தலைவி மல்லிகா, கவுன்சிலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News