அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜை - அமைச்சர் பங்கேற்பு

மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்பு

Update: 2023-11-24 18:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, புழுதிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுப்பணித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், கூடுதல் வகுப்பறை கட்டிடங்களுக்கான பூமி பூஜையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்து தெரிவிக்கையில், தமிழகத்தில் சிறப்பான ஆட்சியினை நடத்திக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர், அனைத்து துறைகளும் சிறந்து விளங்கிடும் வகையில், சிறப்பான நிர்வாகத்தை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளார்கள். அதில், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவைகளை தனது இரு கண்களாக கொண்டு, பொதுமக்களின் உடல் நலத்தினை பேணிக்காத்திடும் பொருட்டும், இந்தியாவின் எதிர்கால தூண்களாக விளங்கக்கூடிய மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையிலும், தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை அறிவித்து, அதனை திறன்பட செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கென அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து, அறிவுப்போட்டிகள் நிறைந்த இக்காலகட்டத்தில் மாணவர்கள் நவீன காலத்திற்கு ஏற்றவாறு தங்களது அறிவுத்திறன் மற்றும் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் பொருட்டும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், காலை உணவு திட்டம் மற்றும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் போன்ற முன்னோடி திட்டங்களை புதிதாகவும் செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக, பெற்றோர்களின் சிரமத்தை பொருளாதார ரீதியாக குறைத்துவிடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து மாணாக்கர்களுக்கும், பெற்றோர்களின் நிலையிலிருந்து அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறார்கள். இவ்வாறாக, மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் திட்டங்களை வழங்கி வருவது மட்டுமன்றி, அவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்திடும் பொருட்டு, அனைத்து பள்ளிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும், தேவையான கூடுதல் வகுப்பறைகள், சுற்றுச்சுவர், சமையலறைக்கூடம், நூலகங்கள் மற்றும் மராமத்து பணிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மொத்தம் 10 பள்ளிகளில் மொத்தம் ரூ.1243.72 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கென, அரசின் சார்பில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, இன்றைய தினம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள புழுதிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.169.44 இலட்சம் மதிப்பீட்டில் 8 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுமானப் பணிகளை 7 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தரமான முறையில் கட்டி முடிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, இப்பள்ளிக்கென விளையாட்டு திடல் அமைப்பதற்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில், அதனையும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்

Similar News