நிலம் ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வழியுறுத்தி ஆர்ப்பாட்டம்
நிலம் ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
.தமிழக அரசு கொண்டு வந்த நிலம் ஒருங்கிணைப்பு சட்டம் 2023 உடனடியாக திரும்ப பெற வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை செய்யாறு வட்டம் மேல்மா கிராமத்தை சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிர் செய்யும் விளைநிலங்களை தமிழ்நாடு அரசு தொழில்துறை மூலம் கைய்யகப்படுத்தி சிப்காட் தொழிற்பூங்கா 3 வது திட்டம் விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு தொழில்துறை மூலம் அதற்கு உண்டான ஆயத்த பணிகள் தற்போது செய்துவருகிறது.
இப்பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா திட்டம் விரிவாக்கம் செய்ய 3200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிர் செய்யும் விளைநிலங்களை பரிபோகும். இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும் . இப்பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா வந்தால் பல வித பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு,
இப்பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க விளை நிலங்களை தமிழ்நாடு அரசுக்கு கொடுக்கமாட்டோம் என்று கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் அறவழியில் இப்பகுதி உள்ள விவசாயிகள் போராட்டம் செய்து வந்துள்ளனர். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறவழியில் போராடிய ஏழு விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்த
காவல்துறையை கண்டித்தும் அறவழியில் போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை கண்டித்தும், திருவண்ணாமலை மாவட்டம் நிர்வாகம் மூலம் சிப்காட் வேண்டாம் என்று எதிர்புக்கா போராடிய 31 விவசாயிகள் மீது பல்வேறு வகையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெறகோரியும், திராவிட முன்னேற்றக் கழக அரசு அரசின் சிறப்பு திட்டம் என்ற பெயரில் இதுவரை
விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தமிழகத்தில் அனைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது .தற்போது தமிழக அரசு கொண்டு வந்த நிலம் ஒருங்கிணைப்பு சட்டம் 2023 தமிழக விவசாயிகளுக்கு விரோதமான சட்டம் இது .தமிழக அரசு கொண்டு வந்த நிலம் ஒருங்கிணைப்பு சட்டம் 2023 இதை உடனடியாக திரும்ப பெற வழியுறுத்தி வருகின்ற 29.11.2023 புதன்கிழமை காலை 11 மணிக்கு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிப்காட் தொழிற்பூங்கா 3 வது திட்டம் விரிவாக்கம் செய்தால் பாதிப்பில் உள்ளாகும் போராட்டம் செய்த விவசாயிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்து தமிழகம் பல பகுதிகளில் சிப்காட் தேவை இல்லாத திட்டத்தை கொண்டு வருவதை திராவிட
முன்னேற்றக் கழக அரசு உடனடியாக கைவிட வழியுறுத்தி பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு கொடுத்து தமிழக அரசுக்கு பலத்த எதிர்பார்ப்பு காட்டும் வகையில் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும்படி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் R வேலுச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.