சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்பு

Update: 2023-11-25 03:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு முனைவர் பட்ட ஆய்வு நிறைவு செய்த 153 மாணவர்களுக்கு பட்டமும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர், முதுகலை மற்றும் இளங்கலைப் பாடங்களில் முதலிடம் பிடித்த 104 மாணவர்களுக்கு தங்கப் பதக்கத்துடன் கூடிய பட்ட சான்றிதழையும் ஆளுநர் வழங்கினார்.

பெரியார் பல்கலைக்கழக 22வது பட்டமளிப்பு விழாவின் வாயிலாக, மேடையில்  ஆளுநரிடம் பட்டங்களைப் பெற்ற 257 மாணவர்களுடன் சேர்த்து  சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருக்கும் இணைவு பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 42,915 மாணவர்களுக்கும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 978 மாணவர்களுக்கும், பெரியார் தொலை நிலைக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 631 மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பதிவாளர் கே.தங்கவேல், தேர்வாணையர் பேராசிரியர் எஸ்.கதிரவன் மற்றும் பேராசிரியர்கள், ஆட்சிக்குழு மற்றும் ஆட்சி பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News