தண்ணீர் தொட்டிற்குள் உயிரிழந்த தாய், குழந்தை உடல்

தண்ணீர் தொட்டிற்குள் குழந்தையுடன் உயிரிழந்து கிடந்த தாய்

Update: 2023-11-26 16:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (30) இவர் அங்குள்ள ஒரு தனியார் கிரசரில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனா (26) இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 1 ½ வயதில் வைஷாலி என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று 26-11-2023 மதியம் மீனாவும் அவரது குழந்தையும் வீட்டில் இருந்துள்ளனர். முனிராஜ் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். முனிராஜின் தந்தை கிருஷ்ணப்பா மற்றும் தாய் சுசிலா ஆகியோர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது முனிராஜின் தங்கை தீபா துணிகளை துவைக்க முனிராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிலிருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வெளியே சென்றுள்ளது. அதனை பார்த்த தீபா குழாய் கேட்வால்வை அடைப்பதற்காக தொட்டிக்குள் பார்த்த போது மீனாவும் அவரது குழந்தை வைஷாலியும் தண்ணீர் இறந்து கிடந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து சகோதரர் முனிராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஓசூர் நகர போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தண்ணீர் தொட்டிக்குள் உயிரிழந்து கிடந்த தாய் மற்றும் மகள் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஓசூர் நகர போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் தொட்டிக்குள் தாயும், குழந்தையும் தவறி விழுந்து உயிரிழந்தார்களா அல்லது வேறு காரணமாக உயிரிழப்பு நடந்ததா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குடும்பத்தில் மீனாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் மீனாவையும், அவரது குழந்தையையும் கணவர் வீட்டார் கொலை செய்து விட்டதாகவும், இருவரது உயிரிழப்பிலும் சந்தேகம் இருப்பதாகவும் மீனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

Similar News