சாதி வாரியான கணக்கெடுப்பு தமிழகத்திற்கு மிக அவசியம்: எம்பி

ஜாதி வாரியான கணக்கெடுப்பு தமிழகத்திற்கு மிக அவசியம் என எம்பி தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-28 16:47 GMT
ஜாதி வாரியான கணக்கெடுப்பு தமிழகத்திற்கு மிக அவசியம் என எம்பி 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வடமாநிலங்களின் தேர்தல் வெற்றி இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்!- மாணிக்கம் தாகூர் எம்பி தகவல்!! விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் நடந்து வரும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு தொழிலாளர்களிடையே கலந்துரையாடிய விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தீபாவளி முடித்த பின்பாக மழைக்கால சீசனை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி நடக்காத2 மாத காலம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கிராமப்புற பெண்களுக்கு வாழ்வாதாரத்துடன் பாதுகாப்பு

அளிக்கிறது. ஜாதி வாரியான கணக்கெடுப்பு தமிழகத்திற்கு மிக அவசிய தேவை என்பதால், மறைந்த முன்னாள் பிரதமர்வி.பி. சிங் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியை முன்னிட்டு அதற்குண்டான அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலமாக இட ஒதுக்கீடு உரிமை பெறுபவர்கள் யார்? யார்? என்பதை கண்டுபிடிக்கும் ஒரு கருவியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு உள்ளது.

மகளிர்க்கு இலவச பேருந்து என்பது மிக முக்கியம். அது அவர்களது உரிமை கூட. இதனை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் ஆக்க மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே. எஸ். அழகிரி4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அவரது ராசிக்கு பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. 5 வட மாநிலங்களின் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெறும். மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், ராஜஸ்தானில் கடுமையான போட்டியுடன் காங்கிரஸ் வெற்றி இலக்கை அடையும். மிசோராமில் காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. அதேபோன்று தெலுங்கானா மாநிலத்திலும் வரலாற்று முக்கியமான தேர்தலாக இந்த தேர்தல் அமைந்து தெலுங்கானாவிலும் காங்கிரஸ் ஆட்சி அமையும். இந்த 5 வட மாநிலங்களின் தேர்தல் வெற்றி மூலமாக இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பலம் ஏற்படும். தமிழகத்தில் வாக்கு வங்கி மிகவும் குறைவாக உள்ள

ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட அதிமுக கூட்டணியில் இல்லை என்கிற போது, அதிமுக கூட்டணி என்பது இன்னமும் எந்த கட்சியுடனும் கூட்டணியே அமையவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. என்றார்.

Tags:    

Similar News