பள்ளி மாணவர்களுக்கு பழ மரக்கன்று வழங்கல்
பள்ளி மாணவர்களுக்கு பழ மரக்கன்று வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-29 11:08 GMT
மரங்கன்று வழங்கல்
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் CSK குளோபல் பவுண்டேஷன் சார்பாக பல்வேறு பழ வகை மரக்கன்றுகள் வழங்கும் விழா மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள், CSK குளோபல் பவுண்டேஷன் தலைவர் சித்திரை செல்வக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார். பள்ளி மாணவர்களுக்கு மா, பலா,கொய்யா, கொடுக்காப்பள்ளி, நெல்லிக்காய் உள்ளிட்ட பழ வகைகள் சேர்ந்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.