சங்கரன்கோவிலில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
சங்கரன்கோவிலில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-29 14:54 GMT
இறந்த மூதாட்டி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பாரதியாா் 7ஆம் தெருவைச் சோ்ந்த கணேசன் மனைவி சங்கரகோமதி (68). அவா், சில நாள்களாக வாதநீா் நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் மனவேதனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவா் திருநெல்வேலி சாலையில் உள்ள கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டாராம். தகவலின்பேரில், நிலைய அலுவலா் விஜயன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சென்று சடலத்தை மீட்டனா்.
சடலத்தை சங்கரன்கோவில் நகர போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.