நீர் நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்போருக்கு இலவச வீடுகள் - வருவாய் துறையினர் நடவடிக்கை

Update: 2023-12-03 16:12 GMT

ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் வீரையன் கண்மாய், குறிச்சி கண்மாய், குடிக்கத்தான் கன்மாய், ஆதிதிராவிடர் கண்மாய், மலைக்காட்டு கண்மாய், செல்லஞ்செட்டி ஊரணிஃ கிழக்கு ஊரணி, வடக்கு ஊரணி உள்ளிட்ட நீர் நிலைகளை ஆக்கிரமித்து ஏராளமான குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு இலவச குடியிருப்புகளை கட்டி கொடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமித்து குடியிருப்போர் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 900 குடும்பங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ஓ.சிறுவயல் அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு 11 ஏக்கரில் ரூபாய் 130.20 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.

இதில் மொத்தம் 900 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இது தவிர சுகாதார நிலையம், ரேஷன் கடை, விளையாட்டு பூங்கா, சந்தை விளையாட்டரங்கு, நூலகம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் பயனாளிகளை கண்டறியும் பணியை வட்டாட்சியர் தங்கமணி தலைமையிலான வருவாய்த்துறையினர் தொடங்கியுள்ளனர்

Tags:    

Similar News