ஸ்ரீபெரும்புதுார் சாலையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
By : King 24X7 News (B)
Update: 2023-12-03 16:35 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியின் முக்கிய வழித்தடமாக காந்தி சாலை உள்ளது. இந்த சாலை வழியே ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் செல்கின்றன. இந்த சாலையில், தனியார் மருத்துவமனை, வங்கிகள், உணவகங்கள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில், கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்,
கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால் தேங்கிஉள்ளது. மேலும், மழை பெய்யும் போது, அவை சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம், கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்து, கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.