நாளை இலவச பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
நாசரேத் கிராம நிர்வாக அலுவலகத்தில் நாளை இலவச பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.;
நாசரேத் கிராம நிர்வாக அலுவலகத்தில் நாளை இலவச பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கிராம நிர்வாக அலுவலகத்தில் நாளை (06.12.2023) புதன் கிழமை இலவச பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஏரல் வட்டாட்சியர் கைலாசகுமாரசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில் "தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஏரல் வட்டம், நாசரேத் கிராமத்தில் நாளை புதன்கிழமை 06.12.2023 காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நாசரேத் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. மேற்படி முகாமில் வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், வருவாய் ஆவணங்களில் பிழை திருத்தம், வருவாய்த்துறை தொடர்பான பிற மனுக்கள் மற்றும் இதர துறை சார்ந்த மனுக்களை பொதுமக்கள் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின் றனர்.