ஆத்தூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல்
ஆத்தூர் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-11 14:38 GMT
மறியலில் ஈடுபட்டவர்கள்
அய்யலுார் அருகே கொன்னையம்பட்டி கிராமத்தினர் பயன்படுத்திய தனியார் நிலம் வழியிலான பாதையை திடீரென அடைத்ததால் அதிருப்தியான மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.கொன்னையம்பட்டி கிராம மக்கள் ஆலம்பட்டி ரோட்டில் இருந்து தனியார் நிலம் வழியே செல்லும் வண்டி பாதை வழியே சென்று பாலம் இல்லாத வரட்டாற்றை கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தனியார் இடத்தின் உரிமையாளர் நேற்று முன்தினம் மாலை கனரக வாகனங்கள் செல்லாதபடி கற்களை குறுக்காக வைத்து வண்டிப்பாதையை அடைத்தார். அதிருப்தியான கொன்னையம்பட்டி மக்கள் நேற்று காலை அய்யலுார் ஆலம்பட்டி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். வடமதுரை எஸ்.ஐ., பேரூராட்சி தலைவர் 'வருவாய்த்துறையினர் மூலம் அதிகாரப்பூர்வ பாதை கண்டறியப்படும்' எனக்கூற கலைந்து சென்றனர்.