நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா
நடிகர் ரஜினிகாந்தின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்;
By : King 24x7 Website
Update: 2023-12-12 10:15 GMT
நடிகர் ரஜினிகாந்தின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் ரஜினி முருகேசன் தலைமையில். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73 வது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது .முன்னதாக அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு தரை விரிப்பான்களும். கண் பார்வை பாதிக்கப்பட்ட 73 வயோதிகர்களுக்கு கண் கண்ணாடிகளும் மேலும் 73 முதியோர்களுக்கு நிதி உதவியும் வழங்கினர் .பின்னர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் நாகராஜன்.இளவரசன். சக்திவேல்.வரதராஜன் உள்ளிட்ட ஏராளமான ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்