விவசாயிகள் பயிற்சி ஒருங்கிணைந்த பண்ணையம்
மாவட்டத்திற்குள் விவசாயிகள் பயிற்சி ஒருங்கிணைந்த பண்ணையம் நடைபெற்றது. (மானாவரி நில மேம்பாடு )
திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் வட்டாரம் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத்திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகைமை மாவட்டத்திற்குள்ளான விவகாயிகள் பயிற்சி ஒருங்கிணைந்த பண்ணையம் (மானாவரி நில மேம்பாடு ) கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்குட்பட்ட கிராம 40 விவசாயிகளுக்கு அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மா.செல்வாராஜ் தலைமையிலும், வேளாண்மை அலுவலர் ரா திருநாவுக்கரசு மற்றும் துணை வேளாண்மை அலுவலர் சு.சைதன்யம் அவர்களின் மேற்பார்வையிலும், அட்மா திட்ட மேலாளர்களால் 15.12.2023 அன்று நடத்தப்பட்டது.
வேளாண்மை உதவி இயக்குநர் அவர்கள் திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் வேளாண் துறையின் திட்டங்கள் .சிறுதானிய ஆண்டின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துறைக்கப்பட்டது. மண் வள மேலாண்மை,மண் பரிசோதனை,இயற்கை உர மேலாண்மை இயற்கை விவசாயம், வரப்பு மேலாண்மை போன்ற மண் வளத்தை மேம்படுத்தும் முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வுடன் எடுத்துரைக்கப்பட்டது. அட்மா தொழில்நுட்ப மேலாளர்கள் அ. செண்பகம் மற்றும் ம.ஜெனிபர் தமிழ் மண் வளம் செயலி குறித்து விளக்கமளித்தனர்.
இப்பயிற்சியில் வேளாண்துறை மற்றும் சகோதரத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயியன் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.