திருச்சி மாநகரில் காய்ச்சல் சிறப்பு முகாம் அறிவிப்பு
திருச்சி மாநகரில் திங்கட்கிழமை காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-16 16:20 GMT
காய்ச்சல் முகாம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக திருச்சி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. திடீர் பருவநிலை மாற்றத்தால் பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக டெங்கு காய்ச்சல் தற்போது பரவி வருகிறது.
இந்த காய்ச்சல் தொற்றைத் தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் (18.12.2023) காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள் விபரங்களை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.