நிவாரண பொருட்கள் ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்.

கரூரில்,நிவாரண பொருட்கள் ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்.

Update: 2023-12-20 04:16 GMT

நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்

தமிழகத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. சென்னையில் புயலுடன் கூடிய மழை பெய்து ஓய்ந்த நிலையில், மீண்டும் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. தமிழகத்தில் இந்த பகுதிகளில், இதற்கு முன்பு இது போன்ற மழை பெய்தது இல்லை எனக் கூறப்படுகிறது. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இன்று மட்டும், கரூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ சர்க்கரை, 1000 கிலோ கோதுமை, ஒன்னரை டன் அரிசி, சுமார் 18000 பிஸ்கட் மற்றும் ரஸ்க் பாக்கெட்டுகள், 300 பெட்ஷீட்,5600 தண்ணீர் பாட்டில்களை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக தொழிலாளர்கள் லாரியில் பொருட்களை ஏற்றும் பணியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீவிரமாக ஈடுபட்டனர்.
Tags:    

Similar News