திருமயம் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
திருமயம் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-26 09:15 GMT
மணல் கடத்திய டிராக்டர்
திருமயம் தாலுகா வீரணாம்பட்டி கண் மாய் வாரியில் இருந்து அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பனையப்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அனுமதி யின்றி மணல் ஏற்றிவந்த டிராக்டரை தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் டிராக்டர் டிரைவர் கீழே குதித்து தப்பியோடிவிட்டார். டிராக்டரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.