சங்ககிரியில் துப்புரவு பணியாளர்களுக்கு நெகழ்ச்சியை ஏற்படுத்திய அமெரிக்க தொழில் அதிபர்
சங்ககிரியில் துப்புரவு பணியாளர்களுக்கு நெகழ்ச்சியை ஏற்படுத்திய அமெரிக்க தொழில் அதிபர்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள வடுகப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில ஆறு துப்புரவு பணியாளருக்கு தல ஐந்தாயிரம் வீதம் முப்பதாயிரம் ரூபாய் ரொக்க பணத்தை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கி சால்வை அணிவித்து கௌரவித்து சிறப்பித்தார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட வடுகப்பட்டி ஊராட்சி தட்டாம்பட்டி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடுகப்பட்டி ஊராட்சி பகுதியில் பல்வேறு அரசு திட்ட பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்த அமெரிக்கா தொழில் அதிபர் சரவணன் என்பவர் வழங்கிய 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி தலா 5 ஆயிரம் வீதம் 6 துப்புரவு பணியாளர்களுக்கு நன்கொடையாக வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் நன்கொடை வழங்கிய அமெரிக்க தொழிலதிபருக்கு துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.