நடுவீரப்பட்டு அருகே வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு
நடுவீரப்பட்டு அருகே வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்ததையடுத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..;
Update: 2024-02-08 10:26 GMT
கைது
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த வானமாதேவி காலனியை சேர்ந்தவர் முருகேசன் இவர் நேற்று முன்தினம் இரவு தமது வீட்டின் வெளியில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி லோடு கேரியர் வாகனம் தூங்கிக் கொண்டிருந்த முருகேசன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் விஜய் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.