கலவரத்தை கட்டுப்படுத்தும் கவாத்து ஒத்திகை

திருச்சி மாநகரில் காவல் அதிகார கொடி கலவரத்தை எப்படி அடக்கி, கலவரத்தை கட்டுப்படுத்தும் கவாத்து இன்று நடைபெற்றது

Update: 2024-02-17 14:38 GMT

கவாத்து பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் 

திருச்சி மாநகரில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்ட கவாத்துபயிற்சியும் மற்றும் கலவரங்கள் ஏற்பட்டால் கலவரத்தை எப்படி அடக்கி, கலவரத்தை கட்டுப்படுத்தும் கவாத்து (MOB Operation Parade) ஒத்திகையும், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக மீட்டு முதலுதவி செய்வது உள்ளிட்ட ஒத்திகையானது திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மேற்பார்வையில் இன்று(17.02.2024)-ந்தேதி திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இதில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் சுமார் 730 பேர் கலந்து கொண்டு, கலவர ஒத்திக்கை தத்துரூபமாக நடத்தி காட்டப்பட்டது. இந்த ஒத்திகையின்போது கலவரம் ஏற்பட்டால் கலவரக்காரர்கள் மீது தண்ணீரை பீச்சி கட்டுப்படுத்த உதவும் வருண் வாகனம் மற்றும் கண்ணீர்புகை குண்டுகளை வீசும் வஜ்ரா வாகனமும் பயன்படுத்தி தத்ரூபமாக அதன் செயல்திறன் நடத்தி காண்பிக்கப்பட்டது.

மேலும் காயம்பட்டவர்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ் வாகனமும் தத்ரூபமாக பயன்படுத்தி காண்பிக்கப்பட்டது. இந்த ஒத்திகையின்போது காவல் துணை ஆணையர்கள், கூடுதல் துணை ஆணையர், (ஆயுதப்படை), உதவி ஆணையர்கள், ஆகியோர்கள் உடனிருந்தார்கள்.

Tags:    

Similar News