பாலியல் தொந்தரவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாலியல் தொந்தரவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
By : King 24x7 Website
Update: 2024-02-22 06:06 GMT
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பாலியல் தொந்தரவு எதிர்ப்பு கழகம் சார்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு எதிப்பு - விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.அஸ்மத்து பாத்திமா வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். இணைஒருங்கிணைப்பாளர் நாசர் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், பெண்ணியல் துறை, உதவிப்பேராசிரியர்கள் பால்புனிதா மற்றும் சிந்துஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்வில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் மாணவிகள் புகார்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.