மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலா பயணத்தை ஆட்சியர் துவக்கி வைப்பு

பெரம்பலூர் மாவட்டம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலா பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் துவக்கி வைத்தார்.;

Update: 2024-02-29 10:28 GMT

சுற்றுலா துவக்கி வைப்பு 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சித் துறையின் சார்பில் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலா பயண வாகனதத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் மற்ற குழந்தைகளுக்கு இணையாக இருக்கும் வகையில் அவர்களை வருடம் தோறும் சுற்றுலா அழைத்துச் செல்ல வழிவகை செய்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் ஆரம்ப பயிற்சி மையங்கள் மற்றும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மனவளர்ச்சி குன்றிய மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட 40 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், 40 சிறப்பு ஆசிரியர்கள் ஒரு நாள் சுற்றுப்பயணமாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News