குஷ்பு புகை படம், உருவ பொம்மையை செருப்பு, துடைப்பத்தால் அடித்து தீயிட்டு கொளுத்திய திமுக மகளிர் அணியினர்.
குஷ்பு புகை படம், உருவ பொம்மையை செருப்பு, துடைப்பத்தால் அடித்து தீயிட்டு கொளுத்திய திமுக மகளிர் அணியினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-15 12:57 GMT
நடிகை குஷ்பூ படத்தை தீயிட்டு கொளுத்திய மகளிர் அணியினர்
மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கொச்சைப்படுத்திய நடிகை குஷ்புவுக்கு கண்டித்து பூவிருந்தவல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் திமுக மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ.க.வைச் சேர்ந்த குஷ்புவை கண்டித்து அவரது உருவப்படம்,பொம்மையை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்து எரித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.உரிமைத் தொகையை கொச்சைப்படுத்திய குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.