அன்னையர் தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகள் உலக சாதனைகள்

அன்னையர் தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகள் நிகழ்த்திய மூன்று விதமான உலக சாதனைகள்.

Update: 2024-05-12 16:00 GMT

உலக சாதனை படைத்த மாணவி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அன்னையர் தினத்தை முன்னிட்டு யோகா, வில்வித்தை, ஸ்கேட்டிங் என மூன்று விதமான உலக சாதனையை பள்ளி மாணவ- மாணவிகள் நிகழ்த்தினார். அன்னையர் தினம் இன்று உலகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தங்களைப் பெற்ற அன்னையரை பெருமைப்படுத்தும் வகையில் ஆப்ஸ் அகாடமி சார்பில் 12 வயதிற்கு உட்பட்ட மாணவ - மாணவிகளின் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையில் இயங்கி வரும் ஆப்ஸ் அகாடமியின் சார்பில் குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் லக்ஷனா என்ற 8 வயது மாணவி கண்ணாடி கிளாஸ்கள் மீது அமர்ந்து 40 வகையான யோகாசனங்களை செய்து அசத்தினார். அவர் யோகாசனங்கள் செய்து கொண்டிருக்கும் நேரத்திலேயே சாகித்யா பரணி என்ற 12 வயது மாணவி இரண்டு பிளாஸ்டிக் சேர்களின் விளிம்புகளில் காலை வைத்து சுமார் 30 நிமிடம் அதோ முக்த சவாசன செய்து அசத்தினார். இவர்கள் இருவரும் ஒருபுறம் தங்களின் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்க பத்மாசனத்தில் 5 பேர் தரையில் அமர அவர்களுக்கு மேல் பத்மாசனத்தில் ஐந்து பேர் அமர்ந்து தங்களின் சாதனையை வெளிப்படுத்தினர்.

இவைகள் அனைத்தும் தொடர்ந்து 30 நிமிடத்திற்குள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் வில்வித்தை பயின்ற ஸ்ரீராம் பாலாஜி மற்றும் அபிஷேக் இரண்டு மாணவர்களும் ஒரு நிமிடத்திற்குள் 30 அம்புகளை எய்து தங்களின் உலக சாதனையை நிறைவேற்றினர். முன்னதாக நான்கு மாணவர்கள் தொடர்ந்து 45 நிமிடம் ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்தனர். 

   சாதனை படைத்த அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் உலக சாதனைகளை நிறைவேற்றியதால் இவர்களை பாராட்டி குளோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இந்த உலக சாதனைக்கான ஏற்பாடுகளை ஆப்ஸ் அகாடமியின் நிறுவனர் செய்யது ஜுனைத் முனீர் மற்றும் பயிற்சியாளர் இசக்கிமுத்து ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News