கரூர் அருகே பைக் மோதி விபத்து: சிறுவன் படுகாயம்
கரூர் அருகே பைக் மோதி விபத்தில் சிறுவன் படுகாயம் அடைந்தார்.;
காவல் நிலையம்
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம், ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி மகன் லிங்கேஸ்வரன் வயது 17. இவர் மே 17ஆம் தேதி காலை 8 மணி அளவில், கரூர்- தாராபுரம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் டி. வெங்கடாபுரம் பகுதியில் உள்ள முருகேசன் வீட்டுக்கு முன்பாக செல்லும்போது, இவரை முந்தி வேகமாக சென்ற இனோவா கார், திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், திடீரென வலது புறம் காரை திருப்பியதால், பின்னால் வந்த லிங்கேஸ்வரன் டூவீலர், காரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த சிறுவன் லிங்கேஸ்வரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த லிங்கேஸ்வரன் தந்தை தண்டபாணி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,
காரை எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், திடீரென திருப்பி விபத்து ஏற்பட காரணமான கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்னதாராபுரம் காவல் துறையினர்.