வங்கி அதிகாரிகள் ரியல் எஸ்டேட் கும்பலுடன் நிலங்களை கைப்பற்றுவதாக புகார்.

நொய்யல் பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் புகார் மனு

Update: 2024-05-27 13:54 GMT

மனு அளித்த விவசாய சங்கத்தினர்

கோவை,பல்லடம்,திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவயாயிகள் நிலத்தின் பேரில் வாங்கிய கடனை சர்பாசி சட்டத்தை தவறாக பயன்படுத்தி சிறுகுறு விவசாயிகளின் நிலங்களை ரியல் எஸ்ட்டேட் மாபியா கும்பல்களுடன் வங்கி அதிகாரிகள் சேர்ந்து கொண்டு விவசாய நிலங்களை கைப்பற்றி வருவதாகவும்,

இதனால் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகம் தெரிவித்தனர். மேலும் சிலர் சொத்தை இழந்த விரக்தியில் தற்கொலையும் செய்துள்ளார்கால் எனவும் கூறினர்.சர்பாசி சட்டத்தை தவறாக பயன்படுத்த கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில் அந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி விளை நிலங்களை போலி ஆவனங்களை பயன்படுத்தி பறிமுதல் செய்வதாகவும் ரியல் எஸ்டேட் மாபியாக்கள் மீதும் அதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்,

என்று புகார் அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு 1000-க்கு மேற்பட்ட விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News