பலத்த காற்றுடன் பெய்த கனமழை
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.;
Update: 2024-06-03 01:34 GMT
திண்டுக்கல்லில் மழை
தமிழ்நாட்டில் நேற்று திண்டுக்கல் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி திண்டுக்கல், நாகல்நகர், பேகம்பூர், பூச்சிநாயக்கன்பட்டி, சீலப்பாடி, தோமையார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.