குடிபோதையில் கார்களின் கண்ணாடியை உடைத்தவர்கள் கைது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் குடிபோதையில் கார்களின் கண்ணாடியை உடைத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-06-12 14:01 GMT
சங்கரன்கோவிலில் குடிபோதையில் கார்களின் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உச்சினி மாகாளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சாலை குருலட்சுமி என்பவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற நபர்களை மெதுவாக செல்ல வேண்டியது தானே என்று கூறினார்.

இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் ஆத்திரமடைந்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நிறுத்தி வைத்திருந்த சாலை குரு லட்சுமி கார் மற்றும் சங்கர் என்பவரின் காரின் கண்ணாடிகளை கல்லால் எரிந்து சேதப்படுத்தியும், ஆதிசங்கர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராஜ கோபாலன் என்பவர் வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த காரின் கண்ணாடியையும் கல்லால் தாக்கி சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

இது தொடர்பான குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் சங்கரன்கோவில் திரு. வி. க தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் மாரியப்பன் (21) மற்றும் சேகர் என்பவரின் மகன் மாரிமுத்து (21) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு அந்த இருவரையும் செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News