தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
தொழில்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ள தகவலில், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டதின் கீழ் உணவு பதப்படுத்துதல் வகைபாட்டில் பழச்சாறு தயாரித்தல், காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் இறால் கொண்டு செய்யப்படும் ஊறுகாய், வற்றல் தயாரித்தல், அரிசி ஆலை, உலர் மாவு மற்றும் இட்லி தோசைக்கான ஈர மாவு தயாரித்தல், அப்பளம் தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், மரச் செக்கு எண்ணெய், கடலை மிட்டாய், முறுக்கு , பேக்கரி பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைத் திண்பண்டங்கள் தயாரித்தல், காப்பி கொட்டை அரைத்தல், அரிசி மற்றும் சோளப் பொரி வகைகள், வறுகடலை, சத்து மாவு, பால் பதப்படுத்துதல், உண்ணத்தக்க நிலையில் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களைத் தொடங்கவும் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில் நுட்ப மேம்படுத்துதல் செய்தும் பயன் பெறலாம்.
ரூ 1 கோடி வரையிலான திட்டத் தொகை கொண்ட உணவுப் பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெறத் தகுதி பெற்றவை. திட்ட தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தம் பங்காகச் செலுத்த வேண்டும் 90 சதவீதம் வங்கிகளால் பிணை இல்லாக் கடனாக வழங்கப்படும். அரசு மானியம் 35 சதவீதம் அதிக பட்சம் ரூ 10 இலட்சம் வரை வழங்கப்படும். சுய உதவிக் குழுவினர் உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ 40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வெண்டும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர் அவர்களை நேரடியகவோ அல்லது 89255 33977 , 89255 33978 என்ற தொலைபேசி வழியாகவோ அணுகி பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சியர் கற்பகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.