கள்ளக்குறிச்சி சாராய பலியை வைத்து திமுக தான் அரசியல் செய்கிறது: பாஜக

கள்ளக்குறிச்சி சாராய பலியை வைத்து திமுகதான் அரசியல் செய்கிறது என பாஜக பொதுக்குழு உறுப்பினர் தங்க.வரதராஜன் குற்றச்சாட்டியுள்ளர்.

Update: 2024-06-25 17:15 GMT

பாஜக பொதுக்குழு உறுப்பினர்

. இந்திராகாந்தியின் காங்கிரஸ் அரசால் நாட்டின் ஜனநாயகத்தை படுகொலை செய்து நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) அமல்படுத்தப்பட்ட ஜுன் 25-ஆம் தேதியை இந்தியாவின் கறுப்பு நாள் என்று பாஜக மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.

இது குறித்து பாஜக நிர்வாகிகள் கூட்டம் மயிலாடுதுறையில் இன்று நடைபெற்றது. மாவட்ட பார்வையாளர் பி.எல்.அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க.வரதராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: இந்திராகாந்தியால் இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது.

ஜுன் 25 அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நாளை கருப்புநாளாக பாஜக நினைவூட்டி, அவசர நிலை பிரகடனத்தால் மக்கள் சந்தித்த பிரச்னைகளை மக்களிடம் நினைவூட்டுகிறோம். ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு எந்த அருகதையும் கிடையாது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரத்தில் திமுக மனசாட்சியோடு பேச வேண்டும். பாஜகவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கும் காங்கிரஸ் தமிழக கள்ளச்சாராய சாவு குறித்து லோக்சபாவில் காங்., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பேசியிருக்க வேண்டும்.

கள்ளச்சாராய சாவை வைத்து அரசியல் செய்வது திமுகதான். 10 பேர் இறந்தபோது கள்ளச்சாராய சாவு இல்லை என்று அதிகாரிகள் பேட்டிகொடுக்கவில்லை,

என்றால் இவ்வளவு பேர் இறந்திருக்க மாட்டார்கள். சட்டசபை கூடுகின்ற நேரத்தில் பிரச்சனை ஏற்படக்கூடாது என்று தான் அதிகாரிகளை வைத்து கள்ளச்சாராய சாவு இல்லை என்று பேட்டி அளிக்க சொன்னதால் நடந்தது. மக்களுக்கான பிரச்சனைகளை பாஜ எப்படி கையில் எடுக்காமல் இருக்கும். அதிகாரிகள் மீது பழியை போட்டு தப்பிக்க நினைக்கிறது திமுக. சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென்று கூறுகிறோம் ஏன் அதனை செய்ய மறுக்கிறார்கள். மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து,

ஆறுதல் கூறவில்லை சம்பந்தம் இல்லாத விளையாட்டுத்துறை அமைச்சர் சென்று பல மணிநேரம் பெற்றோரை இழந்த மக்களை காக்கவைத்த இழப்பீடு வழங்குவது வேதனை அளிக்கிறது. நீட்தேர்வு மத்திய அரசு ரத்து செய்யாது. நீட் தேர்வு முறைகேடு குறித்து உரிய விசாரணை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான கட்சி திமுக. கடந்த ஆண்டு பயிர்காப்பீடு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி இருந்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைத்திருக்கும். பாஜக மாவட்ட தலைவர் நியமனம் குறித்து கட்சி தலைமைதான் முடிவெடுக்கும் என்றார்.

Tags:    

Similar News