சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கழகம் மற்றும் துரோணர் சிலம்ப விளையாட்டு கழகம் இணைந்து மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. சிலம்ப வித்தகர் சூரியமுர்த்தி தலைமை தாங்கினார். போட்டியில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், திருச்சி, சென்னை, மதுரை, கோயம்புத்துார், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 350 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட சிலம்ப விளையாட்டு கழக தலைவர் சுதாகரன், கள்ளக்குறிச்சி மாவட்ட கயறு தாண்டுதல் சங்க தலைவர் குசேலன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். ஒற்றைகம்பு,இரட்டை கம்பு, வால் வீச்சு, சுருள்வாள், மான் கொம்பு மற்றும் வேள் கம்பு ஆகிய பிரிவுகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் முதல் பரிசு திருவண்ணாமலை அணியும், இரண்டாம் பரிசு திருக்கோவிலுர் துரோணர் விளையாட்டு கழகமும், மூன்றாம் பரிசு கோவை அணியும் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. விழாவில் பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி, தாகப்பிள்ளை,ரோட்டரி தலைவர் அசோக்குமார், இன்னர் வில் கிளப் தலைவி சுபாஷினி ரமேஸ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். பயிற்சியாளர்கள் சூரியமுர்த்தி, தமிழ்செல்வன், ராகுல், பரதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.