இரவு ரோந்து பணிக்கு போலீஸை ஈடுபடுத்த கோரிக்கை
இரவு ரோந்து பணிக்கு போலீஸை ஈடுபடுத்த கோரிக்கை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா உட்பட்ட கல்குணம் ஊராட்சியில் குறிப்பாக தெற்கு தெரு மற்றும் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பகுதியில் கடந்த 2 மாதமாக அசந்து தூங்கும் நேரத்தில் அதிகாலையில் திடீர் திடீரென கூரை வீடு தீப்பற்றி எரிகிறது. இதன் மர்மம் என்னவென்று இதுவரை புரியாத புதிராகவே உள்ளனர். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தூங்காமல் அந்த மர்ம நபர்களை கண்டுபிடிக்க ரோந்து பணியில் சுத்தி சுத்தி வந்தும் மர்ம நபர் சிக்காமல் அவர்கள் கண்ணிலே மண்ணைத் தூவி விட்டு மீண்டும் மீண்டும் வீட்டை கொளுத்தி விட்டு செல்கின்றதாக கூறுகின்றனர். இதுபோன்று நேற்று அதிகாலையிலும் தெற்கு தெருவில் ஒரு கூரை வீடு எரிந்து சாம்பலாகின பொதுமக்கள் இது சம்பந்தமாக குறிஞ்சிப்பாடி காவல்துறைக்கு தகவல் கொடுத்து போலீசார் அங்கே வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் வீட்டை இழந்து நாங்கள் பிள்ளைகளை வைத்து மிகவும் கஷ்டப்படுகிறோம் ஏற்கனவே கல்குணம் கிராமத்தில் இயற்கை சீற்றத்தின் அழிவுகள் எங்களை விட்டு வைக்கவில்லை. தற்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டை மர்ம நபர்களால் குறி வைத்து அசந்து தூங்குகின்ற நேரத்தில் வீட்டை கொளுத்தி விட்டு செல்கின்றனர் இன்னும் எத்தனை வீடுகள் எரியப் போகிறது என்று தெரியவில்லை என தினம் தினம் உறக்கத்தை இழந்தும் வேலை வாய்ப்புகளை இழந்தும் வருமானம் இன்றி வேதனைப்பட்டு வருகின்றோம். இதுவரை உயிர் பலி ஏதும் ஏற்படவில்லை ஏதோ எங்கள் கிராமத்தை கடவுள் காப்பாற்றுகிறார் போல ஆகையால் மேலும் வீடுகள் தீப்பற்றி எரியாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் உடனடியாக வீட்டை கொளுத்தி விட்டு செல்லும் மர்ம நபரை அடையாளம் கண்டு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும் எனவும் அரசு துறையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருக்கும் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் இதுபோன்று மற்ற வீடுகளையும் பாதுகாக்க தமிழக அரசு சிசிடிவி கேமராவை பொருத்தி மர்ம நபர்களை கண்காணிக்க வேண்டும் எனவும். மேலும் மர்ம நபரை கண்டுபிடிக்கும் வரை எங்கள் ஊரிலே இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் கோரிக்கை வைக்கின்றனர்.