கெங்கவல்லி: தலைவாசல் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் க.ராமசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்தில் பேசிய ஒன்றியக்குழு துணைத் தலைவர் அஞ்சலை ராமசாமி, தலைவாசல் தினசரி சந்தை தமிழகத்தில் இரண்டாவது இடமாக உள்ளது. ஆனால் சந்தைப் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. மேலும், குண்டும் குழியுமாக உள்ளதால் விவசாயப் பொருள் களை சந்தைப்படுத்துவதில் மிகவும் சிரமமாக உள்ளது. அதனை சீர் செய்து விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் பயனடைய நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒன்றியப் பகுதிகளில் கொசுத் தொல்லை அதிகமாவதால் அதனை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள், தங்களது பகுதியில் சாலை, குடிநீர் வசதி செய்து தர வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்பாரதி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.